மூன்றே மூன்று விஷயங்கள் :
1. தமிழ் சினிமாவைப்பார்த்து எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளாமல் வரும் இணையும் ரத்தமும் சதையுமான, கோபம், சோகம் போன்ற உணர்ச்சிகள் கொண்ட சாதாரண மனிதர்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் ;
2. இணையை ஆணவத்தோடு கேவலப்படுத்துவதோ அவமானப்படுத்துவது போல நடத்துவதோ திருமணம் நிலைக்க உதவாது. ஆகவே இணையின் ப்ளஸ் மற்றும் மைனஸ்களை அப்படியே ஏற்றுக்கொண்டு பரஸ்பர மரியாதையோடு நடப்பது மிக முக்கியம். இது இருந்தால் அன்பும் பிரியமும் இணக்கமும் தானாக வரும்.
3. தனக்கு நல்ல இணையும் அதன்மூலம் குழந்தைகள் அவர்களின் அரோக்கியமான வளர்ச்சி என்ற நோக்கத்துக்காக திருமணம் செய்துகொள்ளவும். நிர்பந்தத்தாலோ, peer pressure-னாலோ, தான் திருமணத்துக்கு தகுதியற்றவன்(ள்) அல்ல என்று சமூகத்துக்கு நிரூபிப்பதற்காகவோ, தான் infertile அல்ல என்று நிரூபிப்பதற்காகவோ திருமணம் செய்துகொள்ளவேஏஏஏஏஏ கொள்ளாதீர்கள். இது தனது சுயநலத்துக்காக எதிராளியை உணர்வுரீதியாக சுரண்டுவது. இது மிக மிக இழிவான செயல்.