வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் உங்களுக்கு எந்த வயதில் வந்தது?
26 வயதில், திருமணத்திற்கு பின், என் கணவருடன் வெளிநாட்டில் வேலைப் பார்த்துத் தங்கும் சூழல், தனிமை, எந்தவித பின்புலமும் இல்லாமல் தட்டுத்தடுமாறி வாழ்க்கையைத் தொடங்கி, வாழ்க்கை என்றால் என்ன, யாரும் நமக்காக ஒரேடியாக உதவமாட்டார்கள், நமக்கு நாம் தான், நமக்கானதை நாம் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற புரிதலை உணர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கின்றேன் கணவருடன். இந்த புரிதல் நாங்கள் தனித்து விடப்படாது இருந்திருந்தால் நிச்சயமாக ஏற்பட்டிருக்காது என்பதே நிதர்சனமான உண்மை.