கத்தாரில் வேலை, திருமணம் முடிந்து 2 வருடம். நான் சொல்லும் எந்த ஒரு விஷயத்தையும் என் மனைவி கேட்டு நடப்பதில்லை. உதாரணம்: 8 மணிக்கு போன் எடுக்குமாறு 1000 தடவை சொல்லியும் அதே விடயத்துக்கு மீண்டும் சண்டை, பிரச்சனை ஆகிறது. காரணமென்ன? தீர்வு என்ன?
திருமணம் ஆன பிறகு வெளிநாட்டில் வேலை என்றால் மனைவியையும் உடன் அழைத்து சென்றிருக்க வேண்டும் தனியாக போனது உங்கள் தவறு.
இங்கு வெளிநாட்டில் வேலை செய்பவருக்கு நிறைய பேருக்கு இதே பிரச்சினை தான் நாம் வேலை முடித்து எந்த நேரத்தில் வெட்டியாக உள்ளோமோ அந்த நேரத்தில் தான் பேச முடியும்.அதை அவர்களிடம் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். நாம் ஏதோ இங்க வந்து சந்தோஷமா இருக்குற மாதிரி பேசுவாங்க இங்க இருக்குற ஜெயில் வாழ்க்கைல அவங்க கிட்ட பேசுற கொஞ்ச நேரம் தான் நாம நிம்மதியா இருகுறோம். பேசாமலும் இருக்க முடியாது.இங்க நம்ம நிலைமை நாம எவ்வளோ கஷ்ட படறோம்னு யோசிச்சு கூட பார்க்க மாட்டாங்க.
ஃப்ரீயா விடுங்க ஒரு ரெண்டு மூனு நாளைக்கு மெஸேஜ் கால் எதுவும் பண்ணாதீங்க. பாசம் வேணும்னா ரெண்டு நாள் கழிச்சு அங்க இருந்து மெஸேஜ் வரும் பணம் வேணும்னா மாச கடைசில தான் வரும்.