நான் +2 படிக்கும் மாணவி. எனது வீடு சிறியது என்பதால் சில நாளுக்கு முன் தவறுதலாக எனது பெற்றோர்கள் உறவு கொள்வதை பார்த்துவிட்டேன். அன்றிலிருந்து என்னால் அவர்களுடன் சகஜமாக இருக்க முடியவில்லை. படிக்கவும் முடியவில்லை. என் மன சஞ்சலத்திற்கு என்ன தீர்வு?
இது ஒரு சாதரண நிகழ்வு!!! நம் தந்தையும் தாயும் சேர்ந்ததன் காரணமாக தான் நாம் இவ்வுலகை காண நேர்ந்தது.. சிறிய வீடு.. அவர்களின் விலை இல்லா சந்தோஷம் இது மட்டுமே.. இது விளக்கொளியில் நடத்த நம் பெற்றோர்கள் தனி அறை உள்ளவர்கள் அல்லவே!!! எனவே நிழல் உருவம் கொண்டு கற்பனை காட்சியாக தான் இருக்க முடியும்.. சினிமா கதாநாயகன்+ நாயகி முதலிரவு அறைக்குள் சென்று கதவை சாற்றி விட நம் கற்பனை குதிரை பறக்க ஆரம்பித்து விடும்.. திரைஅரங்கு விட்டு வெளியே வர அணைத்தும் மறந்து பஸ் பிடிக்க ஓட வேண்டும்.. அது தான் வாழ்க்கை.. அதுவே தான் வாழ்க்கை!!! மற!!!
வரும் காலம் நம் கையில்!!! அடுத்தவர் கண்ணில், கற்பனையில் காணாத அளவு என் தாய், தந்தைக்கு தனி ஒரு அறை கொடுக்கும் அளவு நான் உயர வேண்டும் என்ற சூளுரையை மனதில் ஏற்றி படிப்பில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.. மறந்தும் கூட இதை இனி வெளி காட்டுதல் தவறு.. தாய் தந்தை அறிந்தால் கூனிகுறுகி விடுவார்கள்.. பிறகு அவர்களை நிமிர செய்வது கடினம்.. வாழ்க வளமுடன்!!!