என் வயது 30 திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்து சகலமும் முடிந்தது, இதுநாள் வரை கணவரிடம் சொல்லாதது துரோகம் செய்வது போன்ற ஒர் உணர்வாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக கணவரிடம் சொல்லத் தோன்றுகிறது, என்ன செய்வது?




அமைதியாக போய் கொண்டு இருக்கும் உங்கள் திருமண வாழ்க்கையை, நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். உங்கள் கணவரிடம் ஏன் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு, முடிந்து போன உங்கள் காதலை சொல்லணும். அதை உங்கள் கணவர் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார் என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாது. இப்பொழுது அவருக்கு நேர்மையாக இருக்கிறீர்கள் அல்லவா. அப்படியே தொடர்ந்து இருங்கள். தேவை இல்லாத குற்ற உணர்வை தூக்கி எறியுங்கள்.