தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருக்கிறது, எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாத போன்ற உணர்வுகளும் உண்மைகளும் என்னை வாட்டி வதைக்கிறது, மனிதாபிமானம் இல்லாத உலகில் இல்லாமலே போய்விடலாம் போல் இருக்கிறது, இதிலிருந்து மீண்டுவர தெளிவு பிறக்க தீர்வு கூற முடியுமா?




முதலில் உங்கள் பிரச்சினை என்ன ?

எதுவாக இருந்தாலும் யாரிடமாவது மனம் விட்டு பேசுங்கள்.

யாருமே இல்லை அல்லது பேச மனம் வரவில்லை என்றால் பாத்ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு தண்ணீரை திறந்து விட்டு உட்கார்ந்து உங்களுக்கு நீங்களே பேசலாம்.

தேவை என்றால் மடலில் வாருங்கள் பேசலாம்.

உலகில் மனிதர்கள் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கிறது அதற்காக உயிரை துறப்பது தான் தப்பிக்கும் வழி என்று நினைத்தால் உலகமே அழிந்து போகும்.

எந்த பிரச்சனைக்கும் மரணம் குறிப்பாக தற்கொலை ஒரு தீர்வு அல்ல.

நீங்கள் ஆண் என்று நினைக்கிறேன்.

அதிகாலையில் எழுந்து கொஞ்ச தூரம் ஓடுங்கள். உடலை உறுதி செய்யுங்கள். வலிமையான உடல் வலிமையான மனதை கொடுக்கும்.

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து மட்டும் எண்ணுங்கள். தேவையற்ற எண்ணங்கள் அவசியமே இல்லை. தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள்.