ஒரு பெண் உன் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?





நீங்கள் இல்லாத போது மற்றவர்களிடம் உங்களை பற்றி பேசும்போது வரும் உற்சாகமும் படப்படப்பும் ஆர்வமும் சந்தோஷமும்,

நீங்கள் பேசும்போது உங்களை வாஞ்சையோடு பார்க்கும் பார்வையும்,

பிறர் உங்களை விட்டுக்கொடுத்தாலும் அவள் மட்டும் விட்டுக்கொடுக்காமல் உங்களுக்காக போராடுவதும், உங்களுக்காக செய்யாத தவறுக்கு திட்டுகளை ஏற்றுக் கொள்வதும், நீங்கள் அவளுடைய அன்பை ஏற்க மாட்டீர்களா என்ற ஏக்கமும்,

நீங்கள் உடனிருந்தால் இந்த உலகையே வென்றுவிடலாம் என்ற கனவுகளோடு இருக்கும்போதும் தெரிந்துவிடும் உங்கள் மேல் உயிராக இருக்கிறாள் என்று.