திருமணம் செய்வது பற்றி உங்களுக்கு கிடைத்த சிறந்த ஆலோசனைகள் என்னென்ன?




உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே சம்மதம் என்று சொல்லுங்கள். எங்க அம்மா சொல்லிட்டாங்க , அப்பா சொல்லிட்டாங்க என்றெல்லாம் சொல்லி,அவர்களுக்காக தான் நான் சம்மதிக்கிறேன் என்று சொல்லாதீர்கள்.

பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை நிறையே படித்திருக்கிறாரா? நிறையே சம்பாதிக்கிறாரா? சொந்த வீடு இருக்கா? என்றெல்லாம் எதிர் பார்க்காமல் மாப்பிள்ளை நல்ல குணம் உடையவரா? எந்த கெட்டபழக்கமும் இல்லாதவரா?மாப்பிள்ளை வீட்டார்கள் எல்லோரிடமும் நன்றாக பழகுவார்களா? அந்த வீட்டிற்கு சென்றால் நம் பெண் நிம்மதியாக வாழ முடியுமா? என்று மட்டும் யோசியுங்கள்.

 இதை போல மாப்பிளை வீட்டார் தன் மகனுக்கு பெண் பார்க்கும் போது, பெண் வீட்டில் எவ்வளவு நகை போடுவார்கள், பணம் எவ்வளவு கொடுப்பார்கள், சீர்வரிசை எல்லாம் எதிர்பார்ப்பத்தை விட அதிகமாக கொடுப்பார்களா? என்ற கனவோடு பெண் தேடுவதும்,பெண் அதிகம் படித்தவளாகவும் இருக்கவேண்டும் அழகாகவும் இருக்கவேண்டும் , நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர் பார்க்காமல், நல்ல குணமும்,குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் மன பக்குவமும் சிரித்த முகத்தோடு எல்லோரிடமும் அன்பாக பழகும் பெண் கிடைத்தால் போதும் என்று நினையுங்கள். 

இப்படி ஒரு பெண் கிடைக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் வாழ்க்கை என்ற பயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.. அதைப் போலவே ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொன்னது போல மாப்பிளை கிடைத்தால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும்.