வாழ்த்துக்கள் .ஒரு பொது ஊடகத்தில் உங்கள் மனதிலுள்ளதை வெளிப்படையாக கேட்டு உங்களின் உண்மைத்தன்மையை கூறியதற்கு .
கண்ணகிக்கு அடுத்தபடியாக உங்கள்மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படுமளவுக்கும் ,உங்கள் மனைவிக்கும் மிக உண்மையாக நடந்துள்ளீர்கள் .மீண்டும் பாராட்டுக்கள் .
ஆனால் ,அதனை ஒரே நொடியில் ஏன் இழக்கவேண்டுமென்று நினைக்கின்றீர்கள் ?நல்லவனாவது மிகவும் கடினம் .கெட்டவனாவது சிலநொடிகளில் முடியும் .
இவ்வளவு அநியாயமும் ,அக்கிரமமும் நடக்கும் நாட்டில் உங்களைப்போன்று மனைவிக்கு உண்மையாக இருப்பவர்கள் மிகவும் குறைவு .உங்கள் மனைவி நல்ல பாக்கியசாலி .
எனவே இதே நல்ல எண்ணத்துடன் மீதியிருக்கும் வாழ்க்கையையும் கண்கள் நிறைந்த மனைவியுடன் காதலுடன் காலம் கழியுங்கள்.அதுதான் சிறப்பானதாக இருக்கும்.
அதைவிடுத்து இத்தனை வருடம் கட்டிக்காப்பாற்றிய நல்ல மாண்பை உடைத்துவிடாதீர்கள் .
நன்றி .
வணக்கம் .