உறவுகள் என்று சொல்ல ஒருவரும் இல்லை. அவசரத்துக்கு உதவும் நண்பர்களும் இல்லை. நான் வாழ்ந்து தான் ஆக வேண்டுமா?
நீங்கள் பிறக்கும் போது, உங்களோடு உங்கள் நண்பர்களும், உறவினர்களும் பிறந்தார்களா? தனியாக தான் பிறந்தீர்கள், தனியாக தான் போக போகிறீர்கள்.
அப்புறம், நீங்கள் ஏன் அடுத்தவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
உங்களுக்கு வேண்டியது வாழ்க்கையை எதிர் கொள்ளும் தைரியம். தனியாக போராடுங்கள். ஒரு நாள் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை நீங்கள் எதிர்பார்த்து கொண்டே இருந்தால், உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். எல்லோருக்கும் பிரச்சனைகள் உண்டு. உங்களுக்கு மட்டுமில்லை.