கணவனை இழந்த இளம் பெண் தன் குழந்தையுடன் பிறந்த வீட்டில் இருக்க வேண்டுமா? புகுந்த வீட்டில் இருக்க வேண்டுமா?




கணவரை இழந்த பின் கணவர் வீட்டில் அந்த பெண்ணுக்கு மரியாதை இருக்காது. பிறந்த வீட்டிலும், அவளுடைய பெற்றவர்கள் பொருளாதார ரீதியில் மகனை சாராமல் தனித்து இருந்தார்கள் என்றால் மட்டும் அவர்களோடு இருக்கலாம்.

ஆனால் ஒரு பெண் கணவரை இழந்த பின், தைரியமாக தன் பிள்ளைகளோடு தனித்து வாழ்வதுதான் நல்லது. அதற்கு தைரியமும், நல்ல வேலையும் மிகவும் முக்கியம். அடுத்தவர்களை சார்ந்து வாழ்ந்தால், பல அவமானங்களை சந்திக்க நேரிடும்.