எனக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. என்னால் என் கணவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் என் அருகில் வந்தால் நான் விலகிச்செல்கிறேன். ஏதேனும் வழி சொல்ல முடியுமா?
பிரச்சனை உங்களிடம் தான் இருக்கிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது . அது என்னவென்று நீங்கள் மறைத்தாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்பது தான் உண்மை. திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அதை தைரியமாக வீட்டில் சொல்லலாமே ஏன் ஒரு ஆணின் வாழ்க்கையை கெடுக்குறீர்கள்?. உங்கள் மீது குறையை வைத்து கொண்டு ஒன்றும் தெரியாதது போல நடிப்பது சரியா? நீங்கள் இப்படி வெறுத்து ஒதுக்கியும் உங்களிடம் அவர் இருக்கிறார் என்றால் அந்த அளவுக்கு உங்களை நேசிக்கிறார் என்று தானே அர்த்தம். அவரின் அன்பை புரிர்த்து கொண்டு ஒற்றை மனதோடு அவரோடு வாழ முயற்சி செய்யுங்கள். இல்லையேல் விட்டுவிடுங்கள் அவராது நிம்மதியோடு வாழட்டும்.