திருமணம் செய்ய சுத்தமாக விருப்பம் இல்லை. தனியாக வாழ ஆசைப்படுகிறேன். என்ன செய்ய?
திருமணம் என்பது ஒரு மாய லட்டு.
தின்னவன் திண்டாடுவான்.
திங்காதவன் லட்டுக்கு ஏங்கி வருந்துவான்.
அதாவது லட்டு தின்னே கஷ்டப்படலாமே!!
இப்போது என் மகன் கதை. 28 வயதில் சன்னியாசி போல பேசி, வந்த வரன்களில் குறை கண்டு மறுத்தான்.
நான் பிற்காலத்தில் வருந்துவாய், எனவே திருமணம் செய்து கொள் என வற்புறுத்தியும் இணங்கவில்லை.
இப்போது 48 வயது முடியப்போகிறது. இனி வருந்தி என்ன பயன்.
எனவே, படித்த நீங்கள் ஒரு குடும்பத்தை நடத்த பணம் சம்பாதிக்க முடியும் என்ற தைரியம் இருந்தால், காலகாலத்தில் கிடைக்கும் பெண்ணை மணந்து கொண்டு விடவும். நல்ல பெண் அமைவது கடினம். தாமதிக்க வேண்டாம்.