என் மனைவி என் அப்பாவிடம் கண் ஜாடையில் பேசுகிறார். என் மனைவி நான் எந்தவித தவறும் செய்யவில்லை என்கிறார். நான் என்ன செய்வது?



நடத்தையின் மீதான சந்தேகம் வாழ்வை அழிக்கும். விரைவாக தெளிவு பெற்று இதில் இருந்து வெளிவாருங்கள். 

 மனைவி உங்களிடம் மாட்டிக்கொள்வது போல் கண்ஜாடை காட்டினார் என்பது நம்பும்படியாக இல்லை. கண்ஜாடையை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆண்கள் பெரிய வல்லுநர்களும் இல்லை. 

 இந்த கண்ஜாடை நிகழ்விற்கு முன்னதாகவே, உங்கள் மனதில் இந்த சந்தேகத்திற்கான ஒரு விதை தோன்றி இருக்கும். அந்த விதை எது என்று யோசித்துப் பாருங்கள். 

 சமீபத்தில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்பட்ட தொய்வு மற்றும் உங்கள் தன்னம்பிக்கை குறைவு போன்றவையும் இதுபோன்ற சந்தேகத்தை எழுப்பலாம். இந்த சந்தேகத்திற்கு ஆணிவேர் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து அதை சரி செய்ய முயலுங்கள். மனைவியுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வேண்டுமானால் அப்பாவிடமும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

 மனம் குழம்ப வேண்டாம். இதிலிருந்து விரைவில்வெளி வந்துவிடலாம்.