நான் திருமணமானவன், அழகான மனைவி குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டில் குடிவந்த அப்பா இல்லாத இளம்பெண் என்னை விரும்புகிறாள். மிக அழகானவள் எனக்கு திருமணமானது தெரிந்தும் விரும்புகிறாள். என் மனம் தடுமாறுகிறது, நான் என்ன செய்ய?
சற்றே மாற்றி யோசியுங்கள்.. நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் மனைவி : உங்கள் மனைவி இருக்கும் இடத்தில் நீங்கள் !
இப்போது சொல்லுங்கள்.. உங்கள் மனம் ஒப்புமா ?
அழகான குருவிக் கூட்டைக் கலைத்து விடாதீர்கள் அன்பு மகனே !