ஈசல் என்று ஒன்றைப் பற்றி நாம் எல்லோரும் நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? மழைக்காலத்தில் ஒரே ஒரு நாள்தான் அதனுடைய வாழ்க்கை….அதுவும் மற்ற பறவைகள் மற்றும் மனிதர்கள் கண்ணில் பட்டால், சில மணித்துளிகள் முதல் சில மணி நேரம் வரை மட்டுமே அதற்கு உயிர் வாழ முடியும். ஆனால், அது தன்னுடைய உயிருக்கு பயந்து வெளியே தலைகாட்டாமல் வாழ்வதே இல்லை.
இறைவன் படைப்பில், இவ்வளவு அற்பமான வாழ்நாள் கொண்ட பிறவி, நான் அறிந்த மட்டில் வேறு எதுவுமே சாத்தியமா என்று தெரியவில்லை. அந்த உயிரினமே இவ்வளவு தைரியத்தோடு இருக்குமானால், அனைத்து உயிரினத்திலும் மிகவும் உயர்ந்த படைப்பான மனித குலம், மரணத்தைப் பார்த்து பயந்து ஆகப்போவது என்ன?
நிறைவாக நான் சொல்ல வருவது என்னவென்றால், எந்தவொரு உயிரினமோ, அது மனிதர்களாகவே இருந்தாலும் சரி, மரணம் யாருக்கு, எப்போது, எப்படி நேரிடும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பது நிச்சயம் மறுக்க முடியாத உண்மை. எவ்வளவு காலம் இப்பூவுலகத்தில் வாழ்ந்தோம், வாழ்கிறோம் அல்லது வாழப்போகிறோம் என்பது முக்கியமல்ல, அந்த வாழ்நாளில் நாம் எப்படி வாழ்ந்தோம், எவ்வளவு பேருக்கு பயனுள்ளவர்களாக வாழ்க்கை நடத்தினோம் என்பதே முக்கியம்.
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
வாழ்க வளமுடன் 🙏