என் கணவர் திருமணமாகி மூன்று வருடம் ஆனபோதும் குழந்தை இல்லை என்று மிகவும் வருந்துகிறார். நான் என்ன ஆறுதல் கூறுவது?
எத்தனையோ குழந்தைகள் அம்மா அப்பா பாசம் கிடைக்காமல் ஆதரவற்ற இல்லங்களில் இருக்காங்க. ஏன் உங்க மனசுல லாம் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று தோன்ற மாட்டேங்குது?
ஒருத்தரெல்லாம், அவருக்கு 20 வருடங்களா குழந்தை இல்லன்னு அழுதுட்டு இருப்பதாக சொன்னார். சாகுற வரைக்கும் கூட குழந்தை இல்லன்னு அழுவாங்க..ஆனா ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கணும்னு தோணாது. அவளோ குறுகிய மனப்பான்மை. என் ரத்தம் இல்லாத குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்தால் அதில் தவறு இல்லை. ஆனா அதுக்காக 20 வருஷமா அழுதுட்டு இருந்தா அது முட்டாள் தனம் இல்லாம வேறு என்ன..
உங்க கணவனிடம், ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று சொல்லிப் பாருங்க. அவர் ஓகே சொல்லிட்டார்னா, உங்க வீட்டில் ஆனந்தம் தவழும் என்பதில் சந்தேகமே இல்லை.