உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத உங்கள் பெற்றோரின் பொன்னான வார்த்தைகள் என்ன?





என் அப்பா அடிக்கடி சொல்வது....

சாமி….

நாம தனியா தான் வந்தோம் தனியா தான் போக போறோம் அதனால எங்காவது தனியா போக வேண்டிய சூழ்நிலை வந்தால் பயப்படாம போகணும்...

நாலு நல்ல விசயம் தெரிஞ்சுக்க வேணும்னா நமக்கு நாலு ஜனங்க கூட வேணும்….

விட்டு கொடுத்து போறனால நாம ஒன்னும் கெட்டு போயிட மாட்டோம்....

கடன் இல்லாம நாம சாப்பிடற சாப்பாடு தான் நம்ம உடம்புல ஒட்டும்...

நிறைய இடத்துக்கு போனால் தான்...நிறைய விசயங்களை தெரிஞ்சுக்க முடியும்….

நம்ம பக்கத்துக்கு வீட்டு காரங்க தான் நம்ம முதலுதவி பெட்டி... உறவினர்கள் எல்லாம் அப்புறம் தான்….

காச பாத்து யாரு கிட்டயும் பழகாதே, நல்ல மனசு இருந்தா போதும்.…

இப்படி தான் வாழ்ந்தும் காட்டினார் என் அப்பா ….

என் அப்பாவே எனக்கு மிக சிறந்த முன் உதாரணம்...