14 வயது முதலே பாலியல் தொழில்.. செக்ஸ் தொழிலிலை நம்பி வாழும் கிராம மக்கள்



ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் கக்ரானாக்லா கிராமத்தில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்கள் இளம் வயதில் இருந்தே பாலியல் தொழில் ஈடுபடுகின்றனர்.


பூர்வகுடிமக்கள் குலத்தொழில்களை கொண்டிருப்பார்கள். அப்படி பல்வேறு குலத்தொழில்கள் இருப்பினும், இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் தொழிலை குடும்பத்தொழிலாக கொண்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் பெருமளவு வசிக்கின்றனர்.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசப்பகுதியில் வாழ்ந்து வந்த இந்த சமூகத்தினர், நடன கலைஞர்களாக இருந்தனர். கலையின் மூலம் பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வந்தவர்கள், பிரபுக்களுக்காக நடனமாடி வந்தனர். ஜமீன்தாரி முறையை ஆங்கிலேயர்கள் தடைசெய்த பின்னர், இவர்களுக்கான தேவைகள் இல்லாமால் போய்விட்டது.

அதன்பின்னர், குடும்ப வருமையை போக்க வீட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நாளடைவில் அதுவே இவர்களின் குடும்ப தொழிலாக மாறிவிட்டது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு பெண்கள் சாம்பாதிக்கும் பணத்தில்தான் வீட்டு ஆண்கள் வாழ்கின்றனர். இதே முறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட, இளம்வயதிலேயே அதாவது 14 வயது தொடக்கத்திலிருந்தே பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடத்தொடங்கி விடுகின்றனர்.

மேலும், இப்படி தொழிலில் ஈடுபடும் பெண்களின் அண்ணன்கள் மற்றும் அப்பாக்களே ஏஜெண்ட்களாக செயல்படுகின்றனர். இந்த சமூக பெண்களுக்கு பெரும்பாலும் திருமணம் நடைபெறுவது கிடையாது. அப்படி திருமணம் செய்துகொண்டால், பெண்கள் அதற்கு பின்பு பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படுவது இல்லை.

2000 ஆம் ஆண்டு தொடங்கத்தில் இந்தியா வளர்ச்சி பாதையை தொடும்போதும், இந்த சமூகத்தின் நிலை மட்டும் மாறவே இல்லை. பல தன்னார்வ தொண்டு அமைப்பினர் இந்த சமூகத்தின் நிலையை மாற்ற முயற்சி எடுத்தனர். இங்குள்ள பெண்களை பள்ளிக்கு அனுப்பவது, வேறு தொழிலில் ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இன்னும் இந்த கிராமத்தில் பாலியல் தொழில் என்பது நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இங்குள்ள ஆண்கள் வேறு தொழில் செய்ய சென்றால், இவர்களின் சமூக பெயர் பார்த்து வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக சிலர் கூறியதையும் பத்திரிக்கை செய்திகளில் படிக்க முடிகிறது. இதையெல்லாம்தாண்டி, இந்த சமூகத்தின் சில பெண்களின் மனநிலையும் பாலியல் தொழிலை ஒட்டியே இருக்கிறது.

ஒரு நாளைக்கு சுமார் ரூ.1000 முதல் ரூ.2000 வரை இந்த தொழிலில் கிடைப்பதாகவும், இதுவே இதர கூலி தொழில்களில் வெறும் ரூ.150 மட்டுமே கிடைப்பதாகவும் பெண் ஒருவர் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமூகத்தில் இவர்கள் மீது இருக்கும் பார்வையில் மாற்றம், அரசு இவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது, பெண்களுக்கான கல்வியை ஊக்குவிப்பது போன்றவை இந்த சமூகத்தில் தற்போது நிலையை வரலாற்று நிகழ்வாக மட்டும் மாற்றும் என எதிர்பார்க்கலாம்.