இன்று நீங்கள் எதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தீர்கள்? ஏன்?




இன்று மருத்துவமனையில் ஒரு சம்பவம் .வெறும் எலும்பும் தோலும் துருத்திய ஒரு வயதான பாட்டி சுமார் 70 வயதிருக்கும் .அவருடைய மகளும் ஏறத்தாழ அப்படியே .வறுமையின் அச்சு முகத்தில் .

டாக்டர் மருத்துவமனையில் அட்மிட் ஆகுமாறு சொல்லவும் எவ்வளவு செலவாகும் என்று மகள் கேட்டார்

செவிலியர் உத்தேசமாக 900 ரூபாய் ஆகும் என்று சொல்லவும் படுக்கையில் அரைகுறை நினைவுடனிருந்த பாட்டி மெதுவாக கண்விழித்து மகளிடம்

வேண்டாம் என்னைய கூட்டிட்டு போயிரு .எப்படியும் இன்னும் 10 நாளையில் செத்துருவேன் .இந்த பணத்தை சாவு செலவுக்கு வச்சுக்கோ உனக்கு யாருமில்லை .நானும் போயிட்டா உனக்கு யாரும் தரமாட்டாங்க ன்னு சொன்னதும் அந்த மகள் அழுதுச்சே ஒரு அழுகை ..கடவுளே …உண்மைக்குமே நீ இருக்குறியா ?