நல்ல நல்ல பிள்ளைகளின் வாழ்க்கை, திருமணத்திற்கு பின் நன்றாக அமையவில்லையே, ஏன்?


திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் நல்லவர்களாகவே இருப்பது தான். இன்றைய சுயநல உலகம் அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதே என் வாழ்க்கையில் நான் தெரிந்துகொண்ட உண்மை!

நான் என்னுடன் பேசுவோரிடம் அடிக்கடி சொல்வதுண்டு,

"நல்லவர்கள் நல்லவர்களாக நடந்துகொள்வதில் தான், கெட்டவர்களுக்கு கெட்டதைச் செய்ய, அடுத்தவரை ஏமாற்ற எவ்வளவு ஏதுவாக இருக்கிறது"

என்று.

இப்படித்தான், நல்ல பிள்ளைகளின் வாழ்வும். சிறிதும் தயக்கமின்றி, வாழ்க்கைத் துணையாக இருந்தாலும், எளிதில் ஏமாற்றுகிறார்கள்.

அதற்கெல்லாம் நியாயம் கற்பிப்பார்கள். பணக்காரர்களாய் இருந்தால் போதும் இந்தக் கொடுமை மேலோங்கும். அதனால், நல்ல பிள்ளைகள் பலரின் வாழ்க்கை திருமணத்திற்குப் பின் சிதைக்கப்பட்டுவிடுகிறது. இது சிலரின் தன்னலம், பேராசை, பணத்தாசை, சிற்றின்பம் என்று பல வகைகளில் வேறுபடுகிறது!