நம் வாழ்க்கையை அடுத்தவர்களுடன் ஒப்பிடாமல் வாழவே முடியவில்லை. என்னதான் செய்வது?




செஸ் விளையாடுவீங்களா?

அதுல ராஜா, ராணி, சிப்பாய், பிசப், யானை, குதிரைன்னு காய்கள் இருக்கும்.



ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரோல் இருக்கும். ராணிக்கு தான் அதிக பவர். எப்படி வேணும்னாலும் நகரலாம்.

சிப்பாய்கள் கவசம். யாரையும் உள்ளே விடாமல் பாதுக்காப்பது அதனுடைய வேலை. எதிரிகளை வெட்டி வீழ்த்துவது.

இதை போன்று எல்லாருக்கும் ஒரு வேலை இருக்கும். ஆனால் இங்க எந்த வேலையும் செய்யாமல் சும்மா ஒருத்தர் இருப்பார். அவருக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. ஜாலியா இருக்கார். மத்தவங்களாம் எப்படி கடினமா வேலை சேய்யுறாங்க. ஆனா இவரை பார் சும்மாவே இருக்காருன்னு எல்லாரும் சொல்லுவாங்க. அவரு வேற யாருமில்லை. நம்ம ராஜா தான்.



ஆனா அவங்களாம் ஒரு விஷயத்தை மறந்துட்டாங்க. அது என்னனா?

இங்க ராஜா இல்லைன்னா விளையாட்டே கிடையாது. மற்றவர்களாம் கடினமா உழைப்பதே ராஜாவை காப்பாத்த தான். ஏன்னா ராஜா இல்லன்னா கேம் ஓவர். யாருக்கு எந்த பவரும் இல்லை வேலையும் இல்லை.

இப்ப சொல்லுங்க யார் பவர்புல்?

இங்க நம்ம வாழ்க்கையில எல்லாருக்கும் ஒவ்வொரு ரோல் இருக்கு. உங்க ரோல் என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்க. அடுத்தவன் முன்னேறிட்டான் நாம இன்னும் முன்னேறலையேன்னு கவலை படத்தேவையில்லை. அது அவன் ரோல்.

வாழ்க்கையில உங்க ரோல் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிட்டா, உங்களுக்கு எவ்வளவு பவர் இருக்குன்னு தெரிஞ்சிடும். அப்பறம் யாரையுமே உங்க கூட நீங்க ஒப்பிட்டு பார்க்கமாட்டீங்க. பிறகு உங்க வாழ்க்கைக்கு நீங்க தான் ராஜா.