கணவனும் மனைவியும் வாழ்நாள் முழுவதும் அன்பாகவும் நட்பாகவும் இருப்பதற்கு நீங்கள் கூறும் ஐந்து விஷயங்கள் என்ன?
- இருவருக்குமிடையே ஒளிவு மறைவே இருக்கக் கூடாது.
- ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது கணவன் மனைவி ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும். அவர்களது குழந்தைகளும் இருப்பது நல்லது.
- முடிந்தவரை கணவன் மனைவி இருவரும் ஒருவர்க்கொருவர் உணவு பரிமாறவேண்டும்.
- இல்லத்து வேலைகள் கட்டாயம் பகிரப்பட வேண்டும்.
- பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்தே செல்ல வேண்டும்.
- விவாதங்கள் கருத்து வேறுபாடுகள் உடனுக்குடன் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும்.
- எந்த நிலையிலும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கவே கூடாது.