வாழ்க்கையை பற்றி இன்று நீங்கள் புதிதாக என்ன தெரிந்து கொண்டீர்கள்?


யாரோட வலியையும் யாராலயும் புரிஞ்சுக்க முடியாது ஆறுதல் வேண்டுமாலும் கூறலாம் ஆனால் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும். கடந்து சென்றால் வாழ்கை அழகாக மாறும் என்கிறார்கள் ஆனால் ஒரு நிமிடத்தை கடக்க ஒரு யுகங்கள் ஆகிறது. வாழ்க்கை முழுவதும் ஒருவர் நம்முடன் பயணிப்பார் என்று ஒரு நம்பிக்கையான கட்டமைப்பை மனது கொண்டிருக்கும்போது அதன் ஏமாற்றம் நரகத்தை விட கொடுமையானதாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் காலம் தான் மருந்து என்றாலும் அந்த காலம் எப்போதும் வரும் என்று மனம் ஏங்கி தவிக்கின்றது வாழ்வின் நம்பிக்கையாக நினைக்கும் ஒருவரின் நிராகரிப்பின் பாதிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை அதை விவரிக்கவும் முடியாது. துன்பங்களுக்கு காரணம் ஆசைதான் என்றாலும் ஏனோ தெரியவில்லை ஒரு மனிதன் ஆசை படாமல் இருக்க முடியவில்லை. இந்த மனித இனம் இயற்கையின் படைப்பா இல்லை கடவுளின் படைப்பா என்று தெரியவில்லை ஆனால் இது ஒரு மோசமான படைப்பு என்பது மட்டும் தெரிகிறது. உடல் ரீதியான வலிகளை தாங்கி விடலாம் ஆனால் மன ரீதியான வலிகளை ஒரு போதும் தாங்க முடியவில்லை, வாழ்வதற்கு ஆசையுமில்லை இறப்பதற்கு வழியுமில்லை. இதுதான் வாழ்க்கையின் இயல்பா? எப்படி கடக்க முடியும் என்று தெரியவில்லை ஆனால் கடந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம்.😔😒😰🥺