கல்லூரி வாழ்க்கையில் நடந்த சம்பவம்....
என் அப்பா இறந்து எட்டு மாதங்கள், வருத்தத்திலே கடந்தன… வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தேன் (இரண்டாம் வருடம்)..
இரண்டாம் வருடம் பாதியில், வகுப்பில் ஒரு பெண் தோழியாகிறாள் இருவரிடமும் நல்ல விதமான நட்பே தொடர்ந்தது…
சிறிது நாளில் மொபைல் நம்பர் பரிமாறிக்கொண்டோம் கால், சாட்டிங் இவ்வாறு ஒரு ஆறு மாதங்கள் சென்றது..
ஒரு நாள் கல்லூரி கேன்டீனில் நண்பர்களோடு இருந்த போது அந்த புண்ணியவதி என்னை விரும்புவதாக கூறினார்…
(உண்மை என்னவென்றால் நானே அதை அவளிடம் சொல்ல காத்து கொண்டு இருந்தேன்…)
அப்பாவும் இல்லாததால் பைனான்சியல் பிரச்சனை வேறு, கல்லூரி சென்று கொண்டே வேலைக்கு செல்வேன் ..
வீடு திரும்ப அதிகாலை 2, 3 மணி ஆகும் ஒரு சில நாள் இரவு 11, 12க்கெல்லாம் முடிந்துவிடும் ..
நான் எனது ஊருக்கு செல்ல அவள் வீட்டின் வழியாக செல்வது வழக்கம்…
அப்படி செல்லும் போது ஒருசில நாட்கள், அவள் வீட்டு மாடியில் இருப்பாள் நான் வண்டியை ரோடு ஓரமாக நிறுத்திவிட்டு பார்த்துக்கொண்டே மொபைலில் பேசிக்கொண்டு இருப்போம்….
ஒரு கட்டத்திற்கு மேல் நான் வீட்டிலும் சொல்லிவிட முடிவு செய்தேன்…
அப்பா இருந்தாலாவது பரவாயில்லை பைனான்சியல் ஆகா சமாளித்துவிடலாம், எனக்கு ஒரு தங்கை உண்டென்பதால் இப்போது கூறுவது சரியில்லை என்று கூறவில்லை..
நான் அவர்களிடம் சொல்லாதது ஒரு விதத்தில் நல்லது என்பதை அவள் என்னிடம் உணர்த்த அவளுக்கு கொஞ்ச நாட்களே ஆனது…
ஆமாங்க அப்போதான் நீங்க கேட்ட அந்த நம்பிக்கை துரோகம் அரங்கேறிய தருணம்..
(Feb 14 கொடுப்பதற்கு ஒரு surprise gift வாங்கியிருந்தேன்…. ஆனால் நீ என்னடா எனக்கு Surprise கொடுக்கறது நான் உனக்கு Surprise தரேன் அப்படிங்கற விதத்துல Feb 13 Night…)
நாசமா போன வண்டி அன்னக்கி பஞ்சர் வேற ஆகிருச்சு சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு அவளிடம் பேச கால் செய்தேன்,
4,5 முறை முயற்சி செய்தேன் எடுக்கவில்லை…
சரி உறங்கிவிட்டாள் போல என்று அவள் வீடு வழியாகவே சென்றேன்… அப்போது 11.30 மணி இருக்கும்… சரி கடைசியாக ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று கால் செய்தேன் எடுக்கவில்லை… ஏமாற்றத்துடன் வண்டியை தள்ள ஆரம்பித்தேன்…
அப்போது அவள் வீட்டின் பின்புறம் நான் கண்ட ஒரு காட்சி நிலைகுலைய வைத்தது நான் இருக்க வேண்டிய இடத்தில் மற்றொருவன்…
(வீட்டின் முற்றத்தில் முத்த மழையில் நனைந்து கொண்டிருந்தவர்களிடம் எப்படி சொல்வது என்னுடைய வலியை)….
வீட்டிற்கு செல்லும் வழியில் பல எண்ணங்கள், அந்த பல எண்ணங்களும் ஒரே பதிலை கூறின தற்கொலை செய்துகொள்ளலாம் என்று…. நானும் இல்லை என்றால் என் அம்மா மற்றும் தங்கையின் நிலை என்ன அவ்வாறும் ஒரு எண்ணம்…. நான் தவறு செய்யவில்லை என்று கண்ணீரோடு வீட்டிற்கு சென்று படுத்துக்கொண்டு தலையணைக்கு கண்ணீரால் அபிஷேகம் செய்தேன்….
அனைவரையும் ஒன்று சேர்க்கும் காதலர் தினம் என்னை மட்டும் பிரித்து வைத்தது…. வருத்தத்துக்குரியது… ஆமாங்க Break up தான்… அதுகூட என்மேல் தவறு உள்ள மாதிரி காட்டி தாங்க பண்ணேன்…
இதுக்கு மேல என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இதை எழுதும் போது கூட கண்கள் குளம் போலத்தான் இருக்கிறது…
அதுக்கப்புறம் கூட ஜூனியர் பொண்ணு ப்ரோபோசல் வந்தது. ஆனால் எனக்கு காதல் மீது அன்று வந்த ஒரு எண்ணம் இன்னும் மறையவில்லை… நான் Committed னு சொல்லிட்டு வந்துட்டேன்…..
காதலில் வேண்டுமானால் நான் தோற்று போயிருக்கலாம் வாழ்க்கையில் அவ்வாறு இருக்கமாட்டேன்…….
இரண்டு வருடம், இதை வெளியில் சொல்லாமல் இருந்தேன் இப்போ சொன்னதுக்கு அப்புறம் தாங்க கொஞ்சம் மனஅமைதி கிடைத்தது…
நேரம் ஒதுக்கி படித்ததற்கு நன்றி….. ( கடல் (காதல்) பயணத்தில் கரை சேரா தோனியாய் நான்)…