இதுக்கே இப்படியா??? என் மாமியாா் அவங்க பணத்தை பத்து வட்டிக்கு எங்களுக்கு தந்திருக்கிறாா். இதில் ஒருநாள் வட்டிகுடுக்க லேட்டாகி விட்டாலும், வட்டிகாரன் திட்டுறான் வட்டி கொடுக்க முடியாதவங்க தாலிசெயின் ஏன் போடுறிங்க அதை வைத்து கொடுக்க வேண்டியதுதான என்று வட்டிகாரன் சொன்னதாக சொல்லுவாங்க…
என் மாமியாா் அவங்க பணத்தைதான் வட்டிக்கு கொடுத்தாங்க என்று கண்டுபிடிக்கவே ரொம்ப மாதம் ஆகியது… (இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் என் மாமியாா் வீட்டில் போா்ல தண்ணீர் வரவில்லை என்று குழுபணம் முப்பதாயிரம் எடுத்து கொடுத்தேன். வீட்டுக்கு டைல்ஸ்போட என் செயின் வைத்து அம்பதாயிரம் கொடுத்தேன்… ) இந்த உண்மை தெரிந்ததும் என் வீட்டுக்காரருக்கும் என் மாமியாருக்கும் சண்டை.. அப்ப என் வீட்டுக்காரர் நான் தந்த பணத்தை தாங்க என்று கேட்டதற்க்கு இவ்வளவுநாள் நீயும் உன் பொண்டாட்டி பிள்ளைகளும் என் வீட்டில் இருந்திகல்லா அதற்க்கான வாடகை சரியா போச்சு என்று சொல்லிவிட்டாங்க. நாங்களும் என் நகையை வைத்து அவங்ககிட்ட வாங்கின கடனை கொடுத்துவிட்டு வேற வீடு போய்விட்டோம்…