நான் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?





முதலில் உங்கள் மனதில் ஒரு இலக்கு இருக்கும்.

உங்கள் எண்ணங்கள் எங்கு சென்றாலும் உங்கள் இலக்கில் தான் வந்து சேரும்.

அந்த இலக்கை அடைந்தால் என்னென்ன கிடைக்கும் — பேர் ,புகழ் ,செல்வாக்கு , பணம் போன்றவை _பற்றிய முடிவு இன்பத்தைக் கொடுக்கும்.

திட்டம் தீட்ட ஆரம்பித்து , ஒவ்வொரு சிறு படிகளாக பிரித்து உங்கள் வேலையைத் தொடங்குவீர்கள்

கவனத்தைக் குவித்து வேலை செய்யும் போது மனம் வேறு திசைகளில் செல்லாது .

தவறுகளைத் திருத்திக் கொண்டு மெதுவாக முன்னேறி வருவீர்கள் .

மற்றவர்கள் உங்கள் மேல் குற்றம் குறை சொன்னாலும் காதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உங்கள் உறுதி , உழைப்பு , உற்சாகம் & ஊக்கம் எல்லாத் தடைகளையும் தாண்டச் செய்யும்.

வெற்றிக் கோப்பை உங்கள் கையில் இருப்பதை பெருமையுடன் பார்ப்பீர்கள் .