மாற்றுத்திறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. குவியும் பாராட்டு!







நடிகர் விஜய் தனது மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கேரள மாநிலம் கேசவபுரத்தை சேர்ந்தவர்கள் ஃபரூக்- ஷைலா தம்பதி. இவர்களுக்கு 25 வயதில் லைஜூ என்ற மகன் உள்ளார். மாற்றுத்திறனாளியான லைஜூ,சிறுவயது முதலே திரைப்படங்களை பார்ப்பதில் ஆரவம் கொண்டவர். இவர் நடிகர் விஜய்யின் மிக தீவிர ரசிகர் ஆவார்.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் நடிக்கும் விஜய் படபிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார். இதை அறிந்த லைஜூ, நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஆனால் படபிடிப்பு தளத்தில் அவரை பார்க்க முடியவில்லை. அப்போது அவரது நண்பர் அருண்லால் என்பவர் லைஜூவின் விருப்பத்தை நடிகர் விஜய்க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

தை அறிந்த விஜய் லைஜூவை சந்திப்பதாக பதிலளித்தார். அதன்படி தான் தங்கியிருந்த ஓட்டலின் லாபியில் வைத்து லைஜூவை விஜய் சந்தித்தார். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், லைஜுவின் குடும்பம் மற்றும் கல்வி குறித்து கேட்டறிந்தார்.




இந்நிலையில் விஜய் தனது மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் விஜய்யின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.