கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவன்.. மனமுடைந்த மனைவி விபரீத முடிவு








சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த துட்டம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர் - சாந்தி தம்பதி. இவர்களுக்கு 19 மற்றும் 17 வயதில் இரு மகன்களும் உள்ளனர். ஜெய்சங்கர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி, கல் உடைக்கும் தொழில் செய்து வருவதால், இவர்கள் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஜெய்சங்கருக்கு கடந்த ஓராண்டாக பெங்களூருவில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த சாந்தி, கணவனை கண்டித்துள்ளார். அதை பொருட்படுத்தாத ஜெய்சங்கர், அந்த பெண்ணுடன் தொடர்ந்து உறவில் இருந்துள்ளார். இதனால் சாந்தி கோபித்துக் கொண்டு தனது இரண்டாவது மகனுடன் சேலம் பைப்பூர் கிராமத்தில் உள்ள தந்தை கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்து விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், தன்னுடைய கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்து, அதை சாந்திக்கு அனுப்பியதுடன், ‘இது போல் உன்னால் எனக்கு சந்தோசம் கொடுக்க முடியாது’ என்று வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி கணவனின் அநியாயத்தை தட்டிக் கேட்க, சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலையத்தில் சாந்தியின் தந்தை கோவிந்தராஜ் புகார் அளித்து இருக்கிறார். தனது மகள் சாவிற்கு மருமகன் ஜெய்சங்கர், அவனுடைய கள்ளக் காதலி ஆகியோர்தான் காரணம், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சாந்தியின் கணவர் ஜெய்சங்கர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜெய்சங்கர், அவருடைய கள்ளக் காதலியுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.