பாக்,அரிசி இறக்குமதிக்கு தடை : ரஷ்யா எச்சரிக்கை

 




மாஸ்கோ: சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில்இரு்நது இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு தடை விதிக்கப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக ரஷ்யா, பாகிஸ்தானி்ல்இறக்குமதி செய்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசிகளில் மெகாசீலியா ஸ்கேலாரிஸ் என்ற தனிப்பட்ட உயரினம் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது ரஷ்யாவின் தாவரவியல் தேவைகளை மீறுவதாக உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விவசாயப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்களும் தாவர சுகாதாரத் தரங்களைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் பாகிஸ்தான் தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னதாக கடந்த 2006 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யாத காரணத்தால் ரஷ்யா பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.