தொப்பை போட்டு விட்டால் அதை குறைப்பதற்கு ஏன் கடினமாக இருக்கிறது?

தொப்பை என்பது ஏதோ திடீரென்று முளைத்த காளான் அல்ல.

உங்களுக்கு 25 வயதில் தொப்பை தெரிகிறது என்றால் குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாகவாவது முளை விட ஆரம்பித்து இருக்கும்.

சிலருக்கு 2,3 வருடங்களுக்கு பிறகு கூட தெரியலாம்.

இப்போ தானே லைட்டா ஆரம்பிக்குதுனு நெனச்சு நம்ம ஆட்களும் கண்டுக்காக எப்போதும் போல சாப்பிட்டுட்டு இருப்பாங்க.

அப்படி சாப்பிடும் போது இன்னும் வளருமே தவிர குறையாது.

அதுக்கு அப்புறம் தான் கவலைப்பட ஆரம்பிப்பாங்க.

இப்படி மாதக்கணக்கில் ,வருடக் கணக்கில் வளர்ந்த தொப்பையை ஒரே நாளில் ஒரு கிலோ எடை குறைக்கலாம் என்ற youtube விளம்பரம் பார்த்து ஏமாந்தால் அது யாருடைய தவறு.

மாதக்கணக்கில் வளர்ந்த தொப்பையை மாதக்கணக்கில் உணவுக் கட்டுப்பாடு , உடற்பயிற்சி இருந்தால் மட்டுமே குறைக்க முடியும்.

இதுவும் அவரவர் உடல் வாகினைப் பொறுத்து மாறுபடும்.

இன்னொரு விஷயம், எடை குறைப்புக்கு சிலர் ஜிம் மட்டும் போவாங்க, வாயை கட்டுப்படுத்தவே மாட்டாங்க. என்னடா 6 மாசமா மாங்கு மாங்குனு ஜிம்முக்கு போறோம். உடம்பு குறையவே இல்லன்னு நினைப்பாங்க.

உடற்பயிற்சி எல்லாம் ஒரு 20% மட்டுமே எடை குறைய உதவும். மீதம் 80% உணவுக் கட்டுப்பாடு தான் அவசியம்.

சிலர் உடற்பயிற்சி எல்லாம் செய்யாமல் உணவுக்கட்டுப்பாடு மூலம் மட்டுமே எடை குறைத்து இருக்கிறார்கள்.

பொறுமை இருந்தால் சாத்தியம்.