நீங்கள் நம்பிக்கை துரோகத்தை உணர்ந்திருக்கிறீர்களா?


நான் குடியிருந்த வீட்டின் அருகில் ஒரு பெண் எனக்கு அறிமுகமாகினாள்.. . அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்…என்னிடம் மிகவும் பாசமோடு பழகினாள் ..

அவள் ஏழ்மை நிலையில் உள்ளவள் என்றாலும்.. அன்பு செலுத்துவதில் பணக்காரியாக தெரிந்தாள்..அதனால் குறைந்த நாளிலே என் மனதில் இடம்பிடித்தாள்....

நான் பழகிய ஓரிரண்டு மாதத்தில் அடிக்கடி என்னிடம் கடன் கேட்பாள்.. நானும் கொடுத்தேன் பின் நான் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே என்னிடம் அவள் வாங்கிய பணத்தை கொடுத்துவிடுவாள்.. அதனால் அவள் நேர்மை எனக்கு பிடித்திருந்தது…

ஒரு நாள் அவள் என்னிடம் வந்து..என் உறவினர் வீட்டு திருமணதிற்கு செல்ல வேண்டும்… உங்கள் நெக்லஸ் கொடுங்கள் நான் திருமணத்திற்கு போய்விட்டு வந்த உடனே கொடுத்துவிடுகிறேன் என்றாள்..

நானும் அவள் மீது கொண்ட நம்பிக்கையில் என் நெக்லசை கொடுத்தேன்.. அவளும் சொன்னது போலவே ஒரு சில மணி நேரத்தில் என் நகையை என்னிடம் கொடுத்துவிட்டாள்..

நானும் அவளுடன் பேசிக்கொண்டே நகையை பெட்டியில் வைத்துவிட்டேன்.. அடுத்த மாதத்தில் எனக்கு ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியது இருந்ததால்.. என் நெக்லசை எடுத்து பார்த்த போது.. அதில் பின் பக்கம் இணைக்கும் வளையங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

உடனே என் தோழியிடம் போய் உன்னிடம் தானே என் நகையை கொடுத்தேன் அதில் எப்படி சில வாளையங்கள் இல்லை என்று கேட்டேன்.... அதற்கு அவள் குழந்தைகள் மீது சத்தியம் செய்து நான் திருடவில்லை.. என் மீது வீண் பழி சொல்லாதீர்கள் என்றாள்...

அவளின் மீது நம்பிக்கை வைத்து என் நகையை கொடுத்தது என் தவறு தான் என்று நினைத்துக்கொண்டு அவளிடம் பேசுவதை தவிர்த்துவிட்டேன் .. சில நாட்களில் அவள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது....

நான் அவள் மீது கொண்ட கோபத்தை மறந்து மருத்துவமனையில் இருக்கும் அவள் குழந்தையை பார்க்க சென்றேன்.. அப்போ தான் அவள் சொன்னாள் உங்களுக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன் என்றும்..

குழந்தைகள் மீது பொய் சத்தியம் பண்ணியதால் தான் தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லமல் போய்விட்டது என்று என்னிடம் சொல்லி அழுதாள்.. நான் சொன்னேன் நீ செய்த தவறுக்கு குழந்தைகள் என்ன பாவம் செய்தது.. அவள் மீண்டு வருவாள் கவலை வேண்டாம் என்றேன்..

ஆனால் அவள் எனக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்னால் மறக்கவும் முடியவில்லை.. மன்னிக்கவும் முடியவில்லை…