இளம் வயதில் பழகும் எந்தெந்த பழக்கங்கள் என்னை பெரிய பணக்காரர் ஆக்கும்?

நான் நம்புற ஒரு விஷயத்தை சொல்லுறேன்.

பணக்காரங்களா எல்லாராலையும் ஆக முடியும். ஆனால் பணக்காரங்களா நிலைக்குறது அது தான் ரொம்ப முக்கியமானது. அப்படி நிலைக்குறதுக்கு ஒரு முக்கியமான தகுதி வேணும்.

இப்ப நீங்க ஒரு பெரிய பணக்காரரா இருக்கீங்கன்னு வெச்சிக்கோங்க. திடீர்ன்னு ஒரு நாள் உங்களுக்கு நஷ்டம் வந்து நீங்க அடிமட்ட ஏழை ஆயிடுறீங்கன்னு வைச்சிக்கோங்க. அப்ப நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?

நடந்ததை நினைச்சி கவலை படுவீங்களா? என்கிட்ட இருந்த எல்லா பணமும் போய்ட்டேன்னு புலம்புறவீங்களா? இப்படி பண்றவங்களாம் ஒரு சாதாரண லெவல்ல இருக்கவங்க தான். இவங்களாம் பணம் போனா வாழ்க்கையே முடிஞ்சிட்டுன்னு நினைப்பாங்க. அவங்க நம்பிக்கை வைச்சது பணத்தின் மீது.

ஆனால் சில பேர் இந்த நிலமையை தெளிவா புரிஞ்சிப்பாங்க. அவங்க எதையுமே இழக்கலைன்னு. ஏன்னா அவங்களுடைய பெரிய சொத்து அவங்க சேர்த்து வைச்ச பணமில்லை. அவங்க அறிவு, உழைப்பு, விடாமுயற்சி. அடிமட்டத்துல இருந்து திரும்ப ஆரம்பிக்கணும்னு சொன்னாலும் ஆரம்பிக்கிற தைரியம். இதெல்லாம் அவங்களை பணக்காரராகவே நிலைக்க வைக்கும்.

இந்த வெட்டப்பட்ட மரத்துல இருந்து மறுப்படியும் துளிர்க்கிற செடி மாதிரி. ஜீரோலயிருந்து ஆரம்பிக்கணும்னாலும் தயங்காமல் ஆரம்பிக்குற மன தைரியம் வேண்டும். இப்படி இருக்கவங்கலாம் தொட முடியாத உயரத்தை கண்டிப்பா தொடுவாங்கங்குறதுல சந்தேகமில்லை.

அப்படிப்பட்ட மன தைரியத்தை, பாசிட்டிவ்வா எடுத்துக்குறது, பணத்தின் மேல நம்பிக்கை வைக்காமல் திறமை மேல நம்பிக்கை வைப்பது இதையெல்லாம் பழகிக்கோங்க.