நெல்லையில் பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்! சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடி உத்தரவு!
நெல்லை மாவட்ட
காவல்துறையின் தனிப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் ராஜகோபால். இவர் நெல்லை
மாவட்டம் தாழையத்து அருகே உள்ள பாதமுத்தூர் தாழையுத்து பகுதியைச் சேர்ந்த +2
படித்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர்
நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர்
மாரியம்மாள் தனிப்படை காவலர் ராஜகோபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
இதற்கிடையில் தகவல் அறிந்த
நெல்லை மாவட்டஎஸ்.பி சிலம்பரசன் துறை ரீதியான விசாரணையின் அடிப்படையில் தனிப் படை காவலர்
ராஜகோபாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
மேலும் தலைமறைவாகியுள்ள
காவலர் ராஜகோபாலை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்பட இருக்கிறார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்
காவலர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.