Skip to main content
உங்கள் வாழ்வில் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட சில உண்மைகளை பகிர முடியுமா?
- இருபதுகளில், இளைஞர்கள் நிம்மதியாக இருப்பதில்லை. குறிப்பாக ஆண்கள்…
- தேவையை விடுத்து, ஆடம்பரத்தை நோக்கியே மனம் செல்கிறது.
- நம்மையும் அறியாமல் நம்மை தொற்றிக் கொண்டு வரும் முதல் காதல் தான் உண்மையான காதல். இரண்டாம் முறை மூன்றாம் முறை வருவது, என்னைப் பொருத்தவரை கால்குலேட்டெட் காதல் என்றே கூறுவேன்.
- ஈர்ப்போ, காமமோ, முதல் காதல் என்று நாம் செய்யும் ஒன்று, நம் நினைவுகளை விட்டு விலகுவது கடினம்…
- சாதாரண விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டு பெரியதாக்கப்படுகிறது.
- அனைவருக்கும் அனைத்தும் தெரிவதில்லை. ஆனால், அனைவருக்குமே ஏதோ ஒன்று தெரிந்திருக்கிறது.
- மனிதர்கள் அனைவருமே மனிதர்களாய் மட்டுமே பார்க்கப்பட வேண்டியவர்கள்.
- நாம் அனைவருமே நமது எண்ணங்களால் வீழ்த்தப்படுகிறோம்.
- இங்கு யாருக்குமே அவர்களுடைய தேவை என்ன என்பது தெரியாது. பிறருடைய தேவைகளையே அவர்களுடைய தேவைகளாக நினைக்கிறார்கள்.
- மனிதர்களுக்கு பிறரைக் கேள்வி கேட்டு தாழ்த்துவது மிகவும் பிடிக்கும்.
- நம்மை வேண்டாம் என்று விட்டு சென்ற நபர்கள், ஏதோ ஒரு சூழலில் நம்முடைய பிரிவை எண்ணி வருந்துகிறார்கள்.
- இலக்குகளை நிர்ணயிப்பது சவாலானது. சொல்ல வேண்டுமென்றால், நமது இலக்குகளை நமக்கு தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.
- ஆன்லைனில் நாம் பார்க்கும் அனைத்துமே பிறருடைய அனுபவங்கள். நாம் நினைத்தால் யாரும் அனுபவிக்காத புதிய அனுபவங்களைப் பெறமுடியும்.
- இந்தியத் திருமணமுறை ஒரு சாபக்கேடு.
- கோரா எனது பொன்னான நேரத்தை அளவுக்கு அதிகமாக களவாடுகிறது.